சென்னை, மே, 29, 106 ஆண்டுகள் பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசுஅலுவலர் ஒன்றியத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் அவர்களை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் த.அமிர்தகுமார் நேரில் சந்தித்து சால்வை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றமைக்காக வாழ்த்துகளை தெரிவித்தார்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும்.
பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டதோடு, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளையும் நேரில் வழங்கியதோடு இக்கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு விஷயங் கள முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்
இச்சந்திப்பின் பொழுது தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவருடன், மாநில துணைத் தலைவர்கள் ஆர்.சி.எஸ் குமார்,எ.ஜெயபாலன் மாநிலப் பொருளாளர் திரவியத்தம்மாள், மாநில மகளிர் அணிச்செயலாளர் மணிமேகலை, மாநிலச் செயலாளர்கள் ஆலிஸ் ஷீலா சுப்ரமணியம், பன்னீர்செல்வம், து.தேவராஜ், மாவட்டத் தலைவர்கள் கிழக்கு சென்னை சி.சுரேஷ், தி ரு வ ள் வ.வேல்முருகன்,வடசென்ைர் அ.பழனிச்சாமி, மத்திய சென்னை டி.ஜி. எஸ் தினகரன்,மேற்கு சென்னை நித்யானந்தம், தென் சென்னை ஜெய கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.